இந்தியாவில் ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் செர்பா என்ஜினை பெற்ற புதிய ஹிமாலயன் 450 பைக்கின் ஆரம்ப விலை ரூ.2.69 லட்சம் முதல் ரூ.2.84 லட்சம் வரை நிர்ணையிக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக முன்பதிவு நடைபெற்று வரும் நிலையில் டெலிவரி உடனடியாக துவங்கப்பட உள்ளது.
5 நிறங்களை பெறுகின்ற ஹிமாலயன் பைக்கில் பேஸ், பாஸ் மற்றும் சம்மிட் என மூன்று விதமான வேரியண்ட் இடம்பெற்றுள்ளது.
Royal Enfield Himalayan 450
செர்பா 450 என அழைக்கப்படுகின்ற 452cc ஒற்றை சிலிண்டர் 4 வால்வுகளுடன் கூடிய DOHC லிக்யூடு கூல்டு என்ஜின் ஆனது அதிகபட்சமாக 8,000 rpm-ல் 40 bhp பவர் மற்றும் 5,000 rpm-ல் 40 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த மாடலில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் இடம்பெற்றுள்ளது.
மேலும், ஈக்கோ ஏபிஎஸ் ஆன், ஈக்கோ ஏபிஎஸ் ஆஃப் பெர்ஃபாமென்ஸ் ஏபிஎஸ் ஆன் மற்றும் பெர்ஃபாமென்ஸ் ஏபிஎஸ் ஆஃப் போன்ற ரைடிங் மோடு ஆப்ஷனையும் பெறுகின்றது.
முன்புற டயரில் 320மிமீ டிஸ்க் பிரேக்குடன் 90/90 R21 அங்குல வீல் மற்றும் பின்புறத்தில் 270 மிமீ டிஸ்க் உடன் அகலமான ரேடியல் 140/80 R17 அங்குல வீல் உடன் டூயல் சேனல் ஏபிஎஸ் ஆனது, ரியர் ஏபிஎஸ் ஆனது சுவிட்ச் ஆஃப் செய்யும் முறையில் இடம்பெற்று புதிதாக தயாரிக்கப்பட்ட சியட் நிறுவன டயர் பெற்றுள்ளது.
புதிய 4 இன்ச் வண்ண TFT கிளஸ்ட்டர் மிக தெளிவான முறையில் பார்வைக்கு அனைத்து அம்சங்களும் தெரியும் வகையில் எளிமையாகவும் அதிக வசதிகள் கொண்டதாகவும் உள்ளது. டிரிப்பர் நேவிகேஷன் ஆனது இப்போது முழு அளவிலான கூகுள் மேப்ஸ் உடன் நேவிகேஷன், இசை, டாக்குமென்ட் சேமிப்பு பெறுவதுடன் யூஎஸ்பி சார்ஜிங் போர்ட் போன்ற வசதிகளை அணுகும் வகையில் உள்ளது.
RE Himalayan 450 Price list
இன்றைக்கு கோவாவில் நடைபெறுகின்ற மோட்டோவெர்ஸ் 2023 அரங்கில் ஹிமாலயன் 450 விலை வெளியாகியுள்ளது.
- Kaza Brown Base – 2.69 லட்சம்
- Pass – ₹ 2.74 லட்சம்
- Summit – ₹ 2.79 லட்சம்
- Hanle Black – ₹ 2.84 லட்சம்
டிசம்பர் 31, 2023 வரை மட்டும் இந்த அறிமுக சலுகை விலை பொருந்தும்.