ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் முதல் பிரீமியம் மேவ்ரிக் 440 (Hero Mavrick) பைக்கின் அறிமுகம் ஹீரோ வோர்ல்டு 2024 அரங்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்பதிவு பிப்ரவரி மாதம் மத்தியில் துவங்க உள்ளது.
முந்தைய ஹார்லி-டேவிட்சன் X440 பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்டாலும் முற்றிலும் மாறுபட்ட ஸ்டைலிங் அம்சங்களை மேவ்ரிக் 440 கொண்டுள்ளதால் இளைய தலைமுறையினர் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பினை பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Hero Mavrick
ரெட்ரோ ஸ்டைல் மற்றும் நவீனத்துவமான அடிப்படைகளை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள ஹீரோ மேவ்ரிக் 440 ரோட்ஸ்டெர் பைக்கில் வட்ட வடிவ எல்இடி புராஜெக்டர் ஹெட்லைட் உடன் எல்இடி ரன்னிங் விளக்குகள் H-வடிவில் அமைந்துள்ளது. ஹெட்லைட்டின் மேற்பகுதியில் நம்பர் பிளேட கொடுக்கப்பட்டு , பெட்ரோல் டேங்க் அமைப்பில் மிக நேர்த்தியான வடிவமைப்பினை பெற்று மேவ்ரிக் 440 பேட்ஜ் ஆனது இணைக்கப்பட்டு, டேங்க் எக்ஸ்டென்ஷன் பகுதியில் ஹீரோ லோகோ உள்ளது. பக்கவாட்டில் Torq-x பேட்ஜ் மற்றும் நேர்த்தியான 17 அங்குல அலாய் மற்றும் ஸ்போக்டூ வீல் ஆப்ஷன் உள்ளது.
மூன்று விதமான வேரியண்டில் வந்துள்ள ஹீரோ மேவ்ரிக் 440 பைக்கில் ஏவியேட்டர் வெள்ளை நிறத்தில் ஸ்போக்டூ வீல் கொண்டும், அலாய் வீல் பெற்றுள்ள அடுத்த வேரியண்ட் மாடல் சிவப்பு, நீலம் மற்றும் டாப் வேரியண்டில் கனெக்ட்டிவ் வசதிகளை கொண்டு , டைமண்ட் கட் அலாய் வீல் பெற்று கருப்பு மற்றும் என்கிமா கருப்பு என மொத்தமாக 5 விதமான நிறங்களை பெற்றுள்ளது.
மேவ்ரிக் பைக்கில் உள்ள ஹீரோ Torq-X 440cc ஏர் ஆயில் கூல்டு ஒற்றை சிலிண்டர் என்ஜின் அதிகபட்சமாக 6000 RPM-ல் 27 bhp பவர் மற்றும் 4000rpm-ல் 36Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் அசிஸ்ட் மற்றும் சிலிப்பர் கிளட்ச் உள்ளது.
நெகட்டிவ் டிஸ்ப்ளே பெற்ற டிஜிட்டல் கிளஸ்ட்டரில் ஸ்மார்ட்ஃபோன் ஒருங்கிணைப்பு மூலம் மிக துல்லியமான டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன், கியர் பொசிஷன் இன்டிகேட்டர், கனெக்ட் அம்சங்கள் குறிப்பிட்ட எல்லையில் பயணிக்கும் ஜியோஃபென்ஸ், வாகன இருப்பிடம் கண்டறிதல், இருப்பிட பகிர்வு, வாகனத்தைக் கண்காணிக்கவும், சாலையோர உதவி இதுபோன்ற பல அம்சங்களை ஹீரோ கனெக்ட் மூலம் மேவ்ரிக் பைக் கொண்டுள்ளது.
ஹீரோ மேவ்ரிக் 440 பைக்கில் டெர்லிஸ் ஸ்டீல் சேஸ் மூலம் வடிவமைக்கப்பட்டு முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பரை பெற்று 110/70 – 17 மற்றும் பின்புறத்தில் 150/60 – 17 டயர் கொண்டுள்ளது. டிஸ்க் பிரேக் 320 மிமீ மற்றும் பின்புறத்தில் 240 மிமீ டிஸ்க் பிரேக் கொண்டு டூயல் சேனல் ஏபிஎஸ் பெற்றுள்ளது.
ஹீரோ மேவ்ரிக் பைக்கின் முன்பதிவு விலை பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஏப்ரல் முதல் டெலிவரி துவங்க உள்ளது.