இந்திய சந்தையில் முதன்முறையாக குறைந்த 110சிசி இன்ஜின் பெற்ற பைக் மாடலாக பஜாஜ் பிளாட்டினா 110 ஏபிஎஸ் விற்பனைக்கு ரூபாய் 65,926 வெளியிடப்பட்டுள்ளது. 110 h-gear மாடலை விட ரூ.1600 வரை விலை கூடுதலாக அமைந்துள்ளது.
பிஎஸ்-6 இன்ஜின் பெற்றதாக வந்துள்ள பிளாட்டினா 110 பைக்கில் வழங்கப்பட்டுள்ள 115.45 சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் எலக்ட்ரானிக் கார்புரேட்டர் பெற்று அதிகபட்சமாக 8.6 ஹெச்பி பவரை 7000 RPM-லும், 9.81 Nm டார்க்கினை 5000 RPM-ல் வழங்குகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
செமி டிஜிட்டல் அனலாக் கிளஸ்ட்டரை பெறுகின்ற பிளாட்டினா 110 ஏபிஎஸ் மாடல் கியரில் கியர் ஷிஃப்ட் இன்டிகேட்டர், கடிகாரம், ஃப்யூவல் இன்டிகேட்டர், ஓடோமீட்டர் ட்ரீப் மீட்டர் போன்றவை உள்ளது.
பின்புறத்தில் 110 மிமீ பயணிக்கின்ற நைட்ரக்ஸ் ஸ்பீரிங் டூ ஸ்பிரிங் சஸ்பென்ஷன் மற்றும் 135 மிமீ பயணிக்கின்ற டெலிஸ்கோபிக் ஃபோர்க் முன்புறத்தில் வழங்கப்பட்டுள்ளது.
முன்புறத்தில் 240 மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 130 மிமீ டிரம் பிரேக் இணைக்கப்பட்டு கூடுதலாக சிங்கிள் சேனல் ஏபிஎஸ் அல்லது சிபிஎஸ் பெறுகின்றது.