டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற அப்பாச்சி RTR 160 4V பைக்கில் டூயல் சேனல் மற்றும் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பெற்றதாக கிடைக்க துவங்கியுள்ள நிலையில் சிறப்பம்சங்கள் மற்றும் தமிழ்நாட்டின் ஆன்-ரோடு விலை பட்டியலை அறிந்து கொள்ளலாம்.
அப்பாச்சி வரிசையில் RTR 160cc , RTR 180cc, RTR 200cc மற்றும் 310cc வரை விற்பனையில் RTR மற்றும் ஃபேரிங் ஸ்டைல் RR பைக்குகள் விற்பனைக்கு கிடைக்கின்றன.
2024 TVS Apache RTR 160 4V
160cc சந்தையில் விற்பனையில் உள்ள பிரசத்தி பெற்ற மாடல்களில் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி மாடலில் 4 வால்வுகளை பெற்ற 159.7cc ஒற்றை சிலிண்டர் ஏர்கூல்டு என்ஜின் ஸ்போர்ட், அர்பன் மற்றும் ரெயின் என மூன்று விதமான ரைடிங் மோடுகள் இடம்பெற்றுள்ளது. Sport மோட் 17.55hp பவரை 9250 rpm-லும், டார்க் 14.73 Nm ஆனது 7250 rpm அடுத்து, Urban/ Rain மோட் 15.64 hp பவரை 8600 rpm-ல், டார்க் 14.14 Nm ஆனது 7250 rpm-ல் வழங்குகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது.
நிறங்கள் மற்றும் பரிமாணங்கள்
ஸ்போர்ட்டிவான டிசைன் அம்சத்தை கொண்டதாக அமைந்துள்ள அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக்கில் ரேசிங் சிவப்பு, மெட்டாலிக் நீலம், நைட் கருப்பு, மேட் கருப்பு மற்றும் லைட்டிங் நீலம் ஆகிய 5 நிறங்களை கொண்டிருக்கின்றது. புதிதாக வந்த டூயல் சேனல் ஏபிஎஸ் பெற்ற மாடலில் லைட்டிங் ப்ளூ பெற்றுள்ளது.
அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக்கின் பரிமாணங்கள் நீளம் 2,035mm, அகலம் 790mm மற்றும் உயரம் 1,111mm பெற்றுள்ளது. வீல்பேஸ் 1,357mm பெற்று கிரவுண்ட் கிளியரண்ஸ் 13.8 லிட்டர் கொள்ளளவு , கெர்ப் எடை 146 கிலோ (144 கிலோ டிரம்) மற்றும் இருக்கை உயரம் 800mm ஆகும்.
இந்த பைக் மாடலில் 12 லிட்டர் பெட்ரோல் டேங்க் உடன் 90/90-17 49P முன்புறத்தில் மற்றும் பின்புறத்தில் 110/80-17 57P (டிரம்) அல்லது டிஸ்க் வேரியண்டில் ரேடியல் டயர் பெற்ற 130/70 R17 M/C 62P கொண்டுள்ளது.
பிரேக்கிங் மற்றும் சஸ்பென்ஷன்
டபூள் கார்டிள் ஸ்ப்ளிட் சின்க்ரோ ஸ்டிஃப் ஃபிரேம் கொண்டு வடிவமைக்கபட்டுள்ள அப்பாச்சி RTR 160 4V மாடலில் முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பெனஷன் பொருத்தப்பட்டு 270mm பிடெல் டிஸ்க் பிரேக் உடன் பின்புறத்தில் மோனோஷாக் சஸ்பென்ஷன் பெற்று 130 மிமீ டிரம் பெற்ற மாடல்களில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் மற்றும் 200 மிமீ டிஸ்க் கொண்ட வேரியண்டில் சிங்கிள் சேனல் மற்றும் டூயல் சேனல் ஏபிஎஸ் என இருவிதமான ஆப்ஷனை பெறுகின்றது.
கிளஸ்ட்டர் மற்றும் ஸ்மார்ட் எக்ஸ் கனெக்ட் வசதி
பொதுவாக எல்இடி ஹெட்லைட் பெற்ற இந்த பைக்கில் டிஜிட்டல் கிளஸ்ட்டரை பெறுகின்ற அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக்கில் ப்ளூடூத் வாயிலாக ஸ்மார்ட்போன் இணைப்பினை ஏற்படுத்தி டிவிஎஸ் ஸ்மார்ட் எக்ஸ் கனெக்ட் வசதியை பெற முடியும். இதன் மூலம் பல்வேறு கனெக்டேட் வசதிகளை வெளிப்படுத்தலாம்.
குறிப்பாக, டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக்கில் ஸ்பெஷல் எடிசன் உட்பட 5 விதமான வேரியண்டுகள் உள்ளன. ஸ்பெஷல் எடிசன் வேரியண்டில் அட்ஜெஸ்டபிள் பிரேக் மற்றும் கிளட்ச் லிவர், இருக்கையில் ரெக்சின் கலர் உடன் லோகோ மற்றும் சிவப்பு வண்ண அலாய் வீல் பெற்றுள்ளது.
அப்பாச்சி RTR 160 4V போட்டியாளர்கள்
டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கிற்கு சவால் விடுக்கும் வகையில் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் 4வி, பல்சர் NS160 ஆகியவற்றை நேரடியாக எதிர்கொள்ளும் நிலையில் மற்ற 150-160cc சந்தையில் உள்ள பைக்குகளும் எதிர்கொள்ள உள்ளது.
TVS Apache RTR 160 4V On road Price in TamilNadu
டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கின் தமிழ்நாடு ஆன்-ரோடு விலை ரூ.1.54 லட்சம் முதல் ரூ.1.65 லட்சம் வரை கிடைக்கின்றது.
விலை (எக்ஸ்-ஷோரூம்) | ஆன்-ரோடு விலை | |
Apache RTR 160 4V Drum | ₹ 1,23,870 | ₹ 1,54,076 |
Apache RTR 160 4V Disc | ₹ 1,27,370 | ₹ 1,57,945 |
Apache RTR 160 4V BT Disc | ₹ 1,30,670 | ₹ 1,62,078 |
Apache RTR 160 4V Special | ₹ 1,32,170 | ₹ 1,64,008 |
Apache RTR 160 4V Dual ABS | ₹ 1,34,990 | ₹ 1,66,110 |
கொடுக்கப்பட்டுள்ள தமிழ்நாடு ஆன்-ரோடு விலை தோராயமானதாகும். சில ஆக்செரீஸ் சேர்க்கும் பொழுது, டீலர்களை பொறுத்து விலை மாறுபடும்.
TVS Apache RTR 160 4V Specs
Engine: | 159.7cc, SOHC, oil-cooled Single cylinder |
Bore x Stroke: | 62.0 x 52.9mm |
Compression Ratio: | 10.0:1 |
Fuel Delivery: | RT FI |
Clutch: | Wet, multiplate |
Transmission | 5-speed |
Power | Sport : 17.55 Ps at 9,250 rpm Urban/ Rain : 15.64 Ps at 8,600 rpm |
Torque | Sport : 14.73 Nm at 7,250 rpm Urban/ Rain : 14.14 Nm at 7,250 rpm |
Frame: | Double cradle Split Synchro Stiff Frame |
Front Suspension: | Telescopic Forks |
Rear Suspension: | Monoshock |
Front Brake: | 270mm disc |
Rear Brake: | 130mm drum & 200mm disc Dual Channel ABS |
Wheel Front/Rear: | 90/90-17 & 110/80-17 57P Drum, 130/70 R17 (Tubeless) |
Wheelbase: | 1357mm |
Ground clearance: | 180mm |
Seat Height: | 800mm |
Fuel Capacity: | 12 L |
Claimed Curb Weight: | 144 kg (Drum) 146 kg (Disc) |