முதன்முறையாக பஜாஜின் டிஜிட்டல் கிளஸ்ட்டருடன் ரைட் கனெக்ட் ஆப் வசதியை பெற்ற பல்சர் N150 பைக்கின் 2024 மாடலின் என்ஜின் விபரம், விலை, முக்கிய சிறப்புகள் பற்றி முழுமையாக அறிந்து கொள்ளலாம்.
பல்சரின் என்150 பைக்கின் தோற்ற அமைப்பில் முந்தைய மாடலை போலவே அமைந்திருந்தாலும் புதுப்பிக்கப்பட்ட பாடி கிராபிக்ஸ் பெற்றுள்ள மாடலில் உள்ள டிஜிட்டல் எல்சிடி கிளஸ்ட்டரின் மூலம் ஸ்மார்ட்போனை ப்ளூடூத் மூலம் இணைக்கலாம்.
2024 Bajaj Pulsar N150
அடிப்படையான வடிவமைப்பில் எந்த மாற்றமும் இல்லாமல் வந்துள்ள பல்சர் N150 பைக்கில் தற்பொழுது இரண்டு வேரியண்டுகள் கிடைக்கின்றது. ஒன்று டிரம் பிரேக் பெற்ற செமி அனலாக் கிளஸ்ட்டருடன் வழக்கமான மாடல் விலை ரூ.1.18 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) புதிதாக இணைக்கப்பட்டுள்ள டாப் வேரியண்டில் இருபக்க டயர்களிலும் டிஸ்க் பிரேக் மற்றும் டிஜிட்டல் கன்சோல் வசதியுடன் உள்ள மாடல் விலை ரூ.1.24 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும்.
இரு வேரியண்டிலும் இடம்பெற்றுள்ள 149.68 cc ஒற்றை சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக பவர் 10.66 kW (14.5 PS) 8500 rpmல் மற்றும் 6,000rpm-ல் 13.5 Nm டார்க் வெளிப்படுத்துவதுடன் இந்த மாடலில் 5 ஸ்பீடு கான்ஸ்டென்ட் மெஸ் கியர்பாக்ஸ் பெறுகிறது.
பஜாஜ் பல்சர் N150 ரைட் கனெக்ட் ஆப் வசதி
புதிதாக இணைக்கப்பட்டுள்ள எல்சிடி டிஜிட்டல் கிளஸ்ட்டரின் மூலம் ஸ்மார்ட்போனை ப்ளூடூத் வாயிலாக பஜாஜ் ரைட் கனெக்ட் ஆப் (Bajaj Ride Connect App) மூலம் இணைக்கும் பொழுது ஸ்மார்ட்போனின் அழைப்புகள், மொபைல் டவர் சிக்னல், போன் பேட்டரி இருப்பு, அழைப்புகளை ஏற்க அல்லது நிராகரிக்கும் வசதி, எஸ்எம்எஸ் அலர்ட் ஆகியவற்றை கிளஸ்ட்டரில் அறிந்து கொள்ளலாம்.
இதுதவிர கியர் பொசிஷன் இன்டிகேட்டர், சராசரி மைலேஜ், ரைடிங்கை பொறுத்து தற்பொழுது மைலேஜ் எவ்வளவு கிடைக்கலாம், எவ்வளவு தொலைவு செல்ல பெட்ரோல் இருப்பு ஆகிய விபரங்களை அறிந்து கொள்ளலாம்.
அடிப்படையான பல்சர் என்150 மாடலில் செமி அனலாக் முறையிலான கிளஸ்ட்டரை கொண்டு கியர் பொசிஷன் இன்டிகேட்டர், கடிகாரம் மற்றும் இருப்பில் உள்ள பெட்ரோல் விபரம் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம்.
பல்சர் N150 மெக்கானிக்கல் அம்சங்கள்
பஜாஜ் பல்சரில் உள்ள மிக நேர்த்தியான பை ஃபங்ஷனல் எல்இடி புரோஜெக்டர் முகப்பு விளக்குடன் பைலட் எல்இடி விளக்குகளை கொண்டுள்ள N150 பைக் மாடலில் முன்பக்கத்தில் 90/90 – 17 டயருடன் பின்புறத்தில் 120/80 – 17 டயரை பெற்று ட்யூப்லெஸ் ஆக அமைந்துள்ளது.
பேஸ் மாடலில் தொடர்ந்து 260 மிமீ டிஸ்க் மற்றும் 130 மிமீ டிரம் பிரேக் மட்டும் உள்ளது. புதிய டாப் வேரியண்டில் 260 மிமீ டிஸ்க் மற்றும் 230 மிமீ டிஸ்க் பிரேக்குடன் இரு மாடல்களிலும் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் உள்ளது.
சஸ்பென்ஷன் அமைப்பில் பொதுவாக முன்புறத்தில் 31mm டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் மோனோஷாக் அப்சார்பர் பெற்று 14 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் கொண்ட பல்சர் N150 மாடலில் 1352 mm வீல்பேஸ், கிரவுண்ட் கிளியரன்ஸ் 165 mm, இருக்கை உயரம் 790 mm மற்றும் கெர்ப் எடை 145 கிலோ கொண்டுள்ளது.
2024 பஜாஜ் பல்சர் N150 விலை பட்டியல்
2024 பஜாஜ் பல்சர் N150 பைக்கிற்கு போட்டியாக 150cc-160cc உள்ள யமஹா FZ-S சீரிஸ், சுசூகி ஜிக்ஸர் 155, டிவிஎஸ் அப்பாச்சி, ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் மற்றும் ஹோண்டா SP160 பைக்குகளும் உள்ளன.
2024 Bajaj Pulsar N150 | Ex-showroom | on-road Price |
---|---|---|
Pulsar N150 | ₹ 1.18 லட்சம் | ₹ 1.43 லட்சம் |
Pulsar N150 Ride connect | ₹ 1.25 லட்சம் | ₹ 1.51 லட்சம் |
(All price Tamil Nadu)