முன்பாக விற்பனையில் கிடைத்த மாடலை விட ரூ.20,000 வரை விலை குறைக்கப்பட்டு 2021 லியோன்சினோ 500 மாடலை பெனெல்லி இந்தியா நிறுவனம் விற்பனைக்கு ரூ.4.60 லட்சத்தில் வெளியிட்டுள்ளது.
மிக நேர்த்தியான நியோ ரெட்ரோ ஸ்டைலிங் அம்சங்கள் மற்றும் டிசைனில் எந்த மாற்றமும் இல்லாமல் வந்துள்ள பைக்கின் பெரும்பாலான பாகங்கள் உள்நாட்டில் உற்பத்தி செய்ய துவங்கியுள்ளதால் விலை குறைக்கப்பட்டுள்ளது.
499.6 சிசி ட்வின் சிலிண்டர் என்ஜின், லிக்விட் கூலிங் ஃப்யூல் இன்ஜெக்ஷன் அதிகபட்சமாக 47.5 bhp பவர் 8,500rpm-லும் மற்றும் 46 Nm டார்க்கை 5,000rpm-ல் வெளிப்படுத்துகிறது. இதில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது.
முன்புறத்தில் 50 மிமீ யூஎஸ்டி ஃபோர்க்குடன் பின்புறத்தில் அட்ஜெஸ்டபிள் மோனோ ஷாக் சஸ்பென்ஷன் இணைக்கப்பட்டுள்ளது. பின்புற டயரில் 260 மிமீ டிஸ்க் மற்றும் முன்புறத்தில் 320 மிமீ டிஸ்க் வழங்கப்பட்டுள்ளது.
தற்போது நாட்டில் உள்ள டீலர்கள் மூலம் ரூ.10,000 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். விரைவில் விநியோகம் துவங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விலை | |
---|---|
2021 Benelli Leoncino 500 Steel Grey | ரூ. 4,59,900 |
2021 Benelli Leoncino 500 Red | ரூ. 4,69,900 |